இலங்கையிலிருந்து கள்ளப் படகில் ஒருவர், தொண்டிக்கு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், கடற்கரை பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தீர்த்தாண்டதானம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்றுக்கொண்டிருந்தவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அதில், அந்நபர் இலங்கையில் உள்ள புதுப்பட்டு ஊரைச் சேர்ந்து அமல்ராஜ் என்பதும் அவ்வப்போது கள்ள படகில் தொண்டி பகுதிக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.
மேலும், அவருக்கு உதவிய மணமேல்குடியைச் சேர்ந்த அருள்நெல்சன் என்பவரையும் எஸ்பி பட்டினம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, இருவரையும் திருவாடானை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எஸ்.பி பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.