நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேங்கியுள்ள நீண்டகால வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இன்று (ஏப்ரல் 10) நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் முதன்மை நீதிபதியுமான சண்முக சுந்தரம் தலைமையில் 542 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் காசோலை மோசடி வழக்கு, வாகன விபத்து வழக்கு, பாகப்பிரிவினை வழக்கு உள்பட பல்வேறு வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாகப்பிரிவினை வழக்கு ஒன்றும், ரூ.40 லட்சம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தப்பட்டு தீர்த்துவைக்கப்பட்டது. இதுபோல பல்வேறு வழக்குகளும் இன்று விசாரணைக்கு சமரச தீர்வு மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.