ETV Bharat / state

ரயில்வே பணியில் தந்தையும் மகனும்... இருவரது ரயிலும் ஓரிடத்தில் சந்திக்கையில் மகன் எடுத்த செல்ஃபி வைரல்! - indian railway

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் ரயில்வேயில் பணிபுரிந்து வரும் நிலையில், இருவரது ரயிலும் தற்செயலாக சந்தித்த போது, மகன் செல்ஃபி எடுத்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகன் எடுத்த செல்பி வைரல்
மகன் எடுத்த செல்பி வைரல்
author img

By

Published : Jun 21, 2022, 4:21 PM IST

ராமநாதபுரம்: எப்போது கைபேசியில் கேமரா வசதி வந்ததோ, அப்போதே புகைப்படங்களுக்கு மவுசு அதிகரித்துபோனது எனலாம். எப்போது வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு எத்தனை புகைப்படங்களை வேண்டுமென்றாலும் கிளிக் செய்து தள்ளலாம் எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஆனால், குழந்தையின் புன்னகை, தாலி கட்டும் தருணம் போல சிலருக்கு சில புகைப்படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுவது உண்டு. அந்த வகையில், தனது தந்தையுடன் மகன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் அவர்களுக்கு வாழ்வில் மிகவும் பொன்னான தருணமாக அமைந்துள்ளது.

ரயில்வே பயண டிக்கெட் பரிசோதகரான மகன் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். அவரது தந்தை ரயில்வே ஊழியர். இருவரும் ரயிலில் பணியிலிருந்த போது, எதிர்பாராத வகையில், இருவரது ரயிலும் ஒரே இடத்தில் ஒன்றை ஒன்று கடந்து சென்றது.

ரயில்வே பணியில் தந்தையும் மகனும்... இருவரது ரயிலும் ஓரிடத்தில் சந்திக்கையில் மகன் எடுத்த செல்பி வைரல்!
ரயில்வே பணியில் தந்தையும் மகனும்... இருவரது ரயிலும் ஓரிடத்தில் சந்திக்கையில் மகன் எடுத்த செல்ஃபி வைரல்!

அப்போது தந்தையுடன் மிக அழகிய ஒரு செல்ஃபியை எடுத்துள்ளார், சுரேஷ் குமார் எனும் ரயில்வே டிக்கெட் பரிசோதகர். அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, 'தந்தை ,மகன்கள் இருவரது ரயில்களும் ஒன்றை ஒன்று கடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: இந்திய பிரபலங்களின் யோகாசான புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.