ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியராக சந்திரகலா பொறுப்பு ஏற்ற பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் குற்றவாளிகள் அதிகம் பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்,
அந்த வகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்திய 7 பேர், போதைப்பொருள்கள் குற்றவாளிகள் 4 பேர், இளவர்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 4 பேர் என மொத்தம் இதுவரை 17 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்நாள் வரை மொத்தம் 54 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.