ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே வடவயலைச் சேர்ந்த கருப்பையா என்பவர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிச்சங்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து, கருப்பையா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், 17 வயதே ஆன சிறுவனை வாகனம் ஓட்ட, அனுமதித்தது சிறுவனின் பெரியப்பாவான தனபாலன் என்பதும், வழக்கில் சம்மந்தப்பட்ட இருசக்கரவாகனம் தனபாலன் பெயரில் இருப்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து திருப்பாலைக்குடி காவல் துறை வழக்கின் சட்டப்பிரிவுகளில் உரிய மாறுதல் செய்து, மேற்படி தனபாலனை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், பெற்றோர்கள் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களிடம் எந்தவொரு வாகனத்தையும் இயக்க அனுமதிக்கக்கூடாது எனவும், அவ்வாறு மீறி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தினாலோ, சம்மந்தப்பட்ட பெற்றோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க...சிக்கன் ரைஸால் கைதான பாஜக பாய்ஸ்