சென்னை, புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிபாஷ். இவர் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அளித்தார். அதில், " அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் பதிவு செய்துவிடுவதாகக் கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார் எனப் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (27) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் பெண்களிடம் நட்பாக பழகுவது போல் பேசி அவர்களின் சமூகவலைதளப்பக்கத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் பதிவு செய்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வாகனத்தைத் திருடியவர் அடித்துக் கொலை - 4 பேர் கைது!