ETV Bharat / state

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கைவாசி கைது

ராமநாதபுரம்: இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கைவாசியை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

கைது
author img

By

Published : Sep 9, 2019, 10:20 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வந்திருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி விரைந்த காவல்துறையினர் இலங்கை அகதியை கைது செய்தனர். அதன்பின் ராமநாதபுரத்தில் உள்ள கியூ பிரிவு காவல் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர் இலங்கை வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த முருகையாவின் மகன் அருண்ராஜ் (24) எனவும், நாமக்கலை அடுத்த பரமத்திவேலூரில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர் எனவும் தெரிய வந்தது. மேலும், அவர் நன்னடத்தை அடிப்படையில் 2017ஆம் ஆண்டு முகாமிலிருந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

அங்கு சென்ற அவருக்கு போதிய வேலை வாய்ப்பும், பொருளாதார வசதியும் இல்லாததன் காரணமாக ஃபைபர் படகு மூலமாக சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார் எனவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

Intro:இராமநாதபுரம்
செப்.9

இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கை தமிழரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை.

Body:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கை அகதி ஒருவர் வந்திருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. தகவலையடுத்து தனுஷ்கோடி விரைந்த காவல்துறையினர் இலங்கை அகதி கைது செய்தனர்.பின் ராமநாதபுரத்தில் உள்ள கியூ பிரிவு காவல் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் இதில் அவர் இலங்கை வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த முருகையாவின் மகன்
அருண்ராஜ் (24) இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர்.
பிறகு நன்னடத்தை அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

இலங்கையில் போதிய வேலை வாய்ப்பும் பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக பைபர் படகு மூலமாக சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார்.

தனுஷ்கோடி மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பகுதிகளில இலங்கையிலிருந்து ஊடுருவல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது தேசப் பாதுகாப்பின் மீதான கேள்வி மீண்டும் ஒருமுறை எழுத்து அது எழுப்பியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.