ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கமுதி அருகேவுள்ள பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த சம்சு அம்மாள், சோலையம்மாள், கிருஷ்ண சாமி, வள்ளிமயில், முனியம்மாள் உள்பட 10 விவசாயிகளின் ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் வீட்டு உபயோகப் பொருள்கள், மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நன்னிலம் அருகே 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் கண்ணீர்