ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரதவீதிகளைச் சுற்றியுள்ள சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காகக் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
பணி முடிந்த பகுதிகளில் குழிகள் சரிவர மூடாமல் மேடும் பள்ளமுமாக சாலை உள்ளது. இதை சரி செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெரு சாலையில் உள்ள பள்ளங்களில் மோட்டார் பைக்குகளை கடத்தி சங்கு ஊதி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையரிடமும் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்!