ETV Bharat / state

சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்!

ராமநாதபுரம்: நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு வந்தடைந்தது.

சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்!
சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்!
author img

By

Published : Jun 18, 2020, 7:06 AM IST

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 15) இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர். தற்போது (ஜூன் 17 இரவு 11.30 மணி) இவரின் உடல் சிறப்பு ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது.

மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டது. பின்னர் ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பழனியின் மனைவி வானதி தேவியிடம் வழங்கினார்.

சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்

பழனியின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க...மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்; உடலுக்கு ஆட்சியர் தலைமையில் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.