ETV Bharat / state

காவலர் உடல் தகுதித் தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி

author img

By

Published : Jul 28, 2021, 4:33 PM IST

காவலர் உடல் தகுதி தேர்வில் 314 பேர் அடுத்தக்கட்ட உடல் திறன் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

காவலர் உடல் தகுதி தேர்வு
காவலர் உடல் தகுதி தேர்வு

ராமநாதபுரம்: சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மீட்புப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்ற 501 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு ஆகியவை கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.

இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் 103 நபர்கள் பங்கேற்கவில்லை. பங்கேற்ற 398 நபர்களில் உயரம், மார்பளவு உள்ளிட்ட தேர்வில் 65 நபர்களும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் 19 நபர்களும் என மொத்தம் 84 நபர்கள் தகுதி பெறவில்லை.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், 314 நபர்கள் அடுத்தகட்ட உடல் திறன் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.