இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்களைச் சுற்றி வளைத்த மத்திய சுங்க புலனாய்வுத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக், ஃபாருக் என்பது தெரியவந்தது. மேலும் இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க புலனாய்வுத் துறையினர் துரத்தியதால் தங்கத்தை கடலில் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளனர்.
மண்டபத்திற்கும் வேதாளைக்கும் இடைப்பட்ட முயல் தீவுப் பகுதியில் தங்கக் கட்டிகளை வீசியதாகக் கூறியதையடுத்து, அப்பகுதியில் கடலோர காவல் படையினர் கடலில் அடியிலிருந்து பல மணி நேரம் தேடியதில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: 'லைசென்ஸ் வாங்கி 10 நிமிஷம் ஆகல' - ஆற்றுக்குள் காரை விட்ட ஓட்டுநர்