ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் உள்ள பழமையான தில்லை காளியம்மன் கோயிலின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல், கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பெயரில் ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளத்துரை நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பஜாஜ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் ரோமியோ சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு தீவிர சோதனை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.