ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் ஏழு டன் எடை கொண்ட ராட்சத நீலத் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையிலான வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்புப் காவலர்கள், கால்நடை மருத்துவர் பகவத்சிங் ஆகியோர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
பின்னர் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு நீலத் திமிங்கலம் இழுத்து வரப்பட்டு, கடற்கரை பகுதியில் வைத்து உடற்கூறாய்வு செய்து புதைக்கப்பட்டது.