ETV Bharat / state

'சமூக நல்லிணக்கம் காக்கப்பட அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' - former mp anwar raja

ராமநாதபுரம்: இந்தியாவில் சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்றால் அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

former mp anwar raja
author img

By

Published : Nov 9, 2019, 5:29 PM IST

அயோத்தியின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று அறிவித்தது.

தீர்ப்பில் முக்கியமாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதி வழங்கி அதற்கான அறக்கட்டளையை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதேபோல் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இது குறித்து ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவிடம் கேட்டபோது, "இந்தத் தீர்ப்பை அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாந்தியும் சமாதானமும் அமைதியும்தான் நமக்கு மிக மிக முக்கியம். இது நம்பிக்கை சம்பந்தமான விஷயம்.

இந்த நம்பிக்கை சம்பந்தமான விஷயத்தில் சட்டம் என்ன சொல்லுகிறது. மக்களின் நம்பிக்கையையும் சட்டத்தையும் ஒன்று சேர்த்து எப்படி தீர்ப்பு வழங்குவது, என்று மிகப்பெரிய குழப்பம் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இப்போது பல்வேறு விஷயங்களைச் சொல்லி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேட்டி

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் பல மதங்கள் பல இனங்கள் இருக்கின்றன. மதச்சார்பற்ற நாட்டில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் மிக மிக அவசியமான ஒன்று. எனவே, அது காக்கப்பட வேண்டுமானால் இந்தத் தீர்ப்பை முழுமையாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என்றார்.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: ஜி.கே. வாசன் கருத்து!

Intro:இராமநாதபுரம்
நவ.9
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்தியாவில் உள்ள அனைதது
மக்களும் ஏற்க வேண்டும் முன்னாள்
எம்.பி அன்வர் ராஜா.Body:அயோத்தியின் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்து. தீர்ப்பில் முக்கியமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதேபோல் முஸ்லிம்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் எம்பி முன்னாள் எம்பி அன்வர் ராஜாவிடம் கேட்டபோது

"இந்தத் தீர்ப்பை அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஏனென்றால் சாந்தியம் சமாதானமும் அமைதியும் தான் நமக்கு மிக மிக முக்கியம், இது நம்பிக்கை சம்பந்தமான விஷயம் நம்பிக்கை சம்பந்தமான விஷயத்தில் சட்டம் என்ன சொல்லுகிறது. மக்களின் நம்பிக்கையையும் சட்டத்தையும் ஒன்று சேர்த்து எப்படி தீர்ப்பு வழங்குவது மிகப்பெரிய குழப்பம் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் இப்போது பல்வேறு விஷயங்களை சொல்லி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த முடிவு எப்படி முடிவாக இருந்தாலும் சரி யார் அதை வரவேற்றாலும் சரி யார் அதை வரவேற்க விட்டாலும் சரி இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் பல மதங்கள் பல இனங்கள் இருக்கின்றன. இந்த மதச்சார்பற்ற நாட்டில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் மிக மிக அவசியமான ஒன்று, எனவே அது காக்கப்பட வேண்டுமானால் இந்த தீர்ப்பை முழுமையாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார்.

முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கியது குறித்து கேட்டதற்கு.

தீர்ப்புக்கு உள்ளே போய் பார்ப்போமேயானால் பல விஷயங்களை பேச வேண்டிய சூழ்நிலை வரும், உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு அளித்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்." என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.