தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர்வரை இருக்கும். அதேபோல் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் கனமழையுடன் சூரைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளன.
மேலும் மீனவர்கள் தங்களது உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி அறிவித்துவருகிறது. இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!