இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இந்த மீன்பிடி துறைமுகத்தில் மூக்கையூர், நரிப்பையூர், வாலிநோக்கம், முந்தல், ரோச்மாநகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை கொண்டு வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிவர், புரெவி புயல் காரணமாக கடந்த 20 நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி பாதுகாத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று (டிச. 07) இரவு மீன்வளத் துறை அலுவலர்களின் உத்தரவின் பேரில், இன்று காலை 6 மணிக்கு மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் தேங்காய், பத்தி உள்ளிட்டவற்றை வைத்து மீன் வளம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்து கடலுக்குச் சென்றனர்.
கடந்த 20 நாள்கள் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.