ETV Bharat / state

'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் - union govt new fishermen bill

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 19, 2021, 7:35 PM IST

Updated : Aug 13, 2021, 6:45 AM IST

ராமநாதபுரம்: மத்திய அரசு வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன் பிடிப்புக்கு எல்லை வரையறுப்பது, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதத்துடன்கூடிய சிறை தண்டனை விதிப்பது, மீன் பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு கட்டணம் வசூலிப்பது, மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற சட்டங்களை நிறைவேற்ற உள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டங்களால் மத்திய அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக வந்து கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசு இலங்கை அரசுடன் இணக்கம் காட்டி மீனவர்களைக் கண்டுகொள்வதில்லை, மீனவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது எனக் கண்டன முழக்கமிட்டனர்.

மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்குத் திட்டம்

மேலும் புதிய மீன்பிடி மசோதாவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மீனவர்களும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் மத்திய அரசு மீன்பிடி மசோதாவை நிறைவேற்றுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருவது வேதனையாக இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த மீனவர்களும் ஒண்றிணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

இதையும் படிங்க: 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

Last Updated : Aug 13, 2021, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.