ETV Bharat / state

ராமநாதபுரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! - Fishermen hunger strike

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையைக் கண்டித்து நாளை மறுதினம் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Hungar strike srilanka navy  ராமநாதபுரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்  மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்  இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்  Fishermen go on hunger strike in Ramanathapuram  Fishermen hunger strike  Fishermen go on a hunger strike to condemn the Sri Lankan Navy
Fishermen go on hunger strike in Ramanathapuram
author img

By

Published : Jan 22, 2021, 10:46 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது படகு மூலம் மோதி துன்புறுத்தி கொலை செய்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இறந்த நான்கு மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சமீபத்தில் கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட படகுகளை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.

கச்சத்தீவு அருகே சுமுகமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருப்பதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.