ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவருமான வைகைச்செல்வன், “இன்று ஸ்டாலின் தன்னை பெருமை பேசிக்கொள்ளும் நிலையில், துண்டுச்சீட்டு இல்லாமல் அவரால் மேடையில் பேச முடியுமா, அப்படி பேச முடியும் என்றால் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?
அவர் டோப்பா முடியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் பத்தவில்லை. ஸ்டாலினுக்கு பில்டிங் ஸ்ட்ராங். பேஸ் மட்டம் வீக்கு. அவருக்கு முடியும் இல்லை மூளையும் இல்லை; மூலப் பத்திரமும் இல்லை. மேலும் 2500ஐ 1500, 5000 என்று கூறிய ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டிற்குப் பட்ஜெட் போட முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கூட்டத்தில் திருவாடானை ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சாமானியரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்றும் ஸ்டாலினிடம் சவால் விடுத்துள்ளார்.