ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அடுத்த சின்னப்பாலம் பகுதிக்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு நாட்டுப் படகை சோதனை செய்தபோது, அப்படகிலிருந்த நால்வர் தப்பியோடினர். பின்னர், அப்படகில் இருந்த சுமார் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 4 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய நால்வரை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். தொடர்ந்து, பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகம் எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்த தங்கத்தை மேலும் அதிகாரிகள் தெரிவித்தபோது தங்கத்தின் எடை ஒரு தோராயமாக மூன்று கிலோ வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், முறையாக அதிகாரிகள் முன் எடை பார்த்து சோதித்த பிறகுதான், முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பியோடிய நால்வரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், ஒருவரைப் பிடித்து அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தனுஷ்கோடி அருகே மற்றொரு நாட்டுப்படகில் இதேபோல கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று 4 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த கடத்தல் தங்கமும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தற்போது ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தை வைத்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறைபிடிக்கப்பட்ட ஒருவரிடம் தப்பிய மூன்று பேர் பற்றியும், இக்கடத்தலில் யாருக்கெல்லாம் பங்குண்டு? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சீனாவில் பரவும் புதிய நோய்.. மாநில அரசுகள் தயாராக இருக்க மத்திய அரசு கடிதம்!