ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி, தமிழ்நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1683 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று(மே.13) மட்டும் 293 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தலைமை மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்தால், சாவு எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும்; உடனடியாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கடித்த பாம்புகள்!