ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நாவஸ் கனி சார்பாக கடந்த 9ஆம் தேதி சாத்தான்குளம் அருகே நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது திமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக இன்பா ரகு என்பவரை ராஜா, அதிமுகவைச் சேர்ந்த சிவசாமி, கவிமலர், இராஜேஷ், சதீஸ்குமார் தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சூரங்கோட்டை திமுக கிளைச் செயலாளர் பாலமுரளி சார்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஈட்டுபட்டுள்ளனர். அது மட்டுமில்லாது அதிமுகவினருக்கும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினர் கணக்கிற்காக இருவரை மட்டும் கைது செய்துள்ளது. எனவே உண்மைகுற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.