இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் இரு வீடுகளில் ஆறு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாலன் நகர், பொன்னையாபுரம், ஐந்து முனை, ஓட்டபாலம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "ராமநாதபுரம் மாவட்டத்தில் தினசரி 1000 முதல் 3000 நபர்களுக்க் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 46 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தேவையான அளவு இருப்பு உள்ளது" எனறு கூறினார்.
இதையும் படிங்க: தீராத உடல்வலி - பவர் ஸ்டாருக்கு கரோனா தொற்று உறுதி