ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆசூர் என்ற கிராமத்தில் முனியசாமி என்பவர் ஆடு மேய்ச்சலுக்கு சென்றார். அந்நேரத்தில், வெயிலுக்கு அவர் ஒதுங்கிய சமயத்தில், அவருடைய ஆடு பாண்டி என்பவரின் பருத்தியை மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியும், அவரின் மகன் ஆனந்தும் முனியசாமியை தாக்கினர்.
இந்த தகராறில், மண்டை உடைந்த முனியசாமி குறித்து அவரது உறவினருக்கு தெரிய, அது இருப்பிரிவு மோதலாக மாறியது. இதில் அரிவாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு இருபிரிவினரும் மோதினர். இந்த மோதலில், திருமால், மாரிசாமி, துரைபாண்டி, தேன்மொழி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த திருமால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் திருமால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கமுதி காவல் துறையினர் இருபிரிவைச் சேர்ந்த 15 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உலகத்தைத் தனதாக்கும் குறுகிய மனப்பான்மையை மனிதன் கைவிட வேண்டும்'