ராமேஸ்வரம் பாம்பன் அருகே புரெவி புயல் வலுவிழுந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதனால் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் புரெவி புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கனமழையால் சிவஞானபுரத்தைச் சேர்ந்த இத்திகா பானு என்பவருக்கு சொந்தமான வீட்டின் மண் சுவர் இடிந்து வழுந்தது. இதில் அவரது ஏழு வளர்ப்பு ஆடுகள் இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்!