ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து 80 நாள்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் இன்று (ஜூலை 5) காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் இன்றி ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை ஆறு மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோயிலுக்குள் நுழையும் முன்
முகக்கவசம் மற்றும் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் எடுத்து செல்லவும், 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இயங்க அனுமதி'