ராமநாதபுரம்: நவராத்திரியின் முக்கிய விழாவான சரஸ்வதி, ஆயுத பூஜை இன்று (அக்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வந்து அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள அம்மன் சன்னதி பின்புறம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழ்நாடு பணிக்கு திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ்..