கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்து மாத காலத்திற்கு பிறகு கோயில்களுக்குச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. கோயில்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், தென் கோடியில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் வெளியிலிருந்து பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.
பக்தர்கள் அனைவரும்,உடல் வெப்ப பரிசோதனை செய்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை: தமிழ்நாடு அரசு