ETV Bharat / state

நாய்க்கடியால் படுகாயமடைந்த பெண்மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு! - ராமநாதபுரத்தில் நாய் கடியால் காயமடைந்த மான்

ராமநாதபுரம்: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பெண்மானை விரட்டிக் கடித்த நாயிடமிருந்து மானை மீட்டு வனத்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

Deer recovered
author img

By

Published : Oct 31, 2019, 7:56 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் தண்ணீர் தேடி பெண்மான் ஒன்று கிராமத்துக்குள் வந்துள்ளது. அப்போது, அந்தமானை நாய் ஒன்று துரத்திக் கடித்ததுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் காயமடைந்த பெண்மானை நாயிடமிருந்து மீட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து, வனச் சரகர் சதீஸ் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பெண்மானை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

நாயிடமிருந்து மீட்க்கப்பட்ட பெண்மான்

இதுகுறித்து வனச்சரகர் சதீஸ்குமார் கூறுகையில், தகவல் அறிந்து இங்கு வந்து ஐந்து வயது மதிக்கத்தக்கப் பெண் மானை மீட்டு அரண்மனை அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் முதலுதவி மற்றும் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தி தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கொண்டு விடப்பட்டுள்ளது என்றார். மேலும் இதுவரை ராமநாதபுரத்தில் நாய் கடித்து 15 மான்கள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: புள்ளிமானை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு -அச்சத்தில் கிராம மக்கள்

Intro:இராமநாதபுரம்
அக்.31

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானை விரட்டிக் கடித்த நாய் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தது கிராம மக்கள்.Body:இராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள வழுதூர் கிராமத்தில் தண்ணீர் தேடி மான் ஒன்று கிராமத்துக்குள் வந்துள்ளது. அந்தமானை நாய் துரத்தி கடித்தது. இதைக் கண்ட கிராம மக்கள் நாயிடமிருந்து காயமடைந்தப் புள்ளி மானை மீட்டு இராமநாதபுரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இராமநாதபுரம் வனச் சரகர் சதீஸ் தலைமையில்
அங்கு சென்ற வனத்துறையினர் மானை மீட்டு
இராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் மானிற்கு சிகிச்சை அளித்து பின் தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் கொண்டு சென்று மானை விட்டனர்.
இது குறித்து இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது "வழுதூர் அருகே நாய் தாக்கி காயமடைந்த மானை கிராம மக்கள் மீட்டு இருப்பதாக தகவல் அளித்தனர். அங்கு சென்று ஐந்து வயது மதிக்கத்தக்கப் பெண் மான் மீட்கப்பட்டு அரண்மனை அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் முதலுதவி மற்றும் நாய்கடி ஊசி செலுத்தி தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது. இதுவரை இராமநாதபுரத்தில் நாய் கடித்து 15 மான்கள் மீட்கப்பட்டு மீண்டும் சரணாலயப் பகுதியில் விடப்பட்டு இருப்பதாக" அவர் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.