ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவ வீரருடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் தனது குடும்பத்தினருடன் வசிக்க புதிதாக வீடு ஒன்றை ராமநாதபுரம் வாணி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் 17 லட்சம் கடன் வாங்கி கட்டியிருந்தார். இந்நிலையில் ரெப்கோ என்ற தனியார் நிதி நிறுவனம் அந்த 17 லட்சம் ரூபாய் வங்கிக் கடனை ரத்துசெய்ததுடன் பழனியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கியது.
அதனை இன்று (செப். 7) மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பழனியின் மனைவி வானதியிடம் வீட்டுப்பத்திரத்தையும், 10 லட்சத்திற்கான காசோலையையும் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். உடன் ரெப்கோ நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் திலகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.