ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் கேரளா கொச்சின் கப்பல் கட்டுமானத் தளத்திலிருந்து புதிதாக செய்யப்பட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நான்கு நீர்வழி பயணிகள் கப்பல் இரு நாள்களுக்கு முன்பு ரயில் பாலத்தை கடப்பதற்காக வந்திருந்தன. இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் சுமார் 440 டன் எடை கொண்டவை.
தற்போது, பாம்பன் துறைமுகத்தில் பாலத்தை கடந்து செல்வதற்காக அனுமதி பெற்று, ரயில்வே துறையின் அனுமதிக்காக கப்பல்கள் காத்திருந்த நிலையில், இன்று காலை பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாம்பன் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் தூக்கு பாலத்தை கடந்து மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை நோக்கி செல்கின்றன.
இதையும் படிங்க: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை!