தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் 1,384 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று ராமநாதபுரம் நகர் பகுதியைச் சேர்ந்த இரு ஆண்கள், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த பெண், தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய செவிலி ஒருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. இதில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில், இன்று ஆறு பேர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 33 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் சதம் அடித்த திருச்சி