ராமநாதபுரத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 56 வயது முதியவருக்கும், தொண்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும் 17 வயது சிறுவனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கோட்டக்குடியைச் சேர்ந்த 23 வயது நிறை மாத கர்ப்பிணிக்கு காரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.
தற்போது, அந்தக் குழந்தைக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது முடிவு இன்னமும் வரவில்லை. மொத்தமாக ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30, இதில் 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?