ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,132ஆக உள்ளது. அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் சக்கரக்கோட்டை, சூரங்கோட்டை ஊராட்சி பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவகிறது. வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டாரவளர்ச்சி அலுவலரின் அறிவுறுத்தலின்படி, தொற்று அதிகம் இருக்கும் இரண்டு பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து வழித்தடத்தின் பாதைகளையும், மறு அறிவிப்பு வரும் வரை தடுப்பு அமைத்து மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.