டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் கலந்துகொண்ட நிலையில், 19 பேர் ஊர் திரும்பியுள்ளனர். அவர்களையும் அவர்களுடைய வீட்டாரையும் தனிமைப்படுத்தி கண்காணித்த சுகாதாரத் துறையினர், அவர்களுடைய ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், அவர்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா இல்லாத நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் அளித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டங்களைக் குறைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் சுகாதாரத் துறையினரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை தயாரிக்கும் சிறைக் கைதிகள்