ETV Bharat / state

செல்போன் உபயோகித்ததால் திட்டிய பெற்றோர்: விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை! - ராமநாதபுரம் மாவட்டம் செய்திகள்

பரமக்குடி அருகே சாப்பிடாமல் செல்போன் உபயோகித்ததற்காக பெற்றோர் திட்டிய காரணத்தால், விரக்தியடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் திட்டிய விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை

author img

By

Published : Jun 8, 2021, 11:08 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி - பத்மா தேவி. இவர்களது பத்தொன்பது (19) வயது பெண், மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அவர் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், மாணவி அதிக அளவு செல்போன் உபயோகித்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி பெற்றோருக்கும் மாணவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் (ஜூன்.08) அதேபோல் மாணவி சாப்பிடாமல் அதிக நேரம் செல்போனை உபயோகித்து கொண்டிருந்தால் அவரது பெற்றோர் ஆத்திரமடைந்த மாணவியை கோபத்துடன் திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீயைப் பற்ற வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வீட்டின் மேற்கூரையில் இருந்து புகை வரத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து, வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்த எதிர் வீட்டினர், அங்கு சென்று பார்த்த போது உள்ளே அலறல் சத்தம் கேட்டது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றபோது எரிந்த நிலையில் இருந்த மாணவியைக் கண்டி அதிர்ந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த பரமக்குடி நகர் காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் இஸ்லாமியர்களின் மயானத்துக்கு செல்லும் பாதை அடைப்பு: அலுவலர்கள் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.