ராமநாதபுரம்: கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகளும் பயிர் நடும் பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (அக்.23) மழை பெய்து கொண்டிருந்த போது. தொண்டி கடற்கரை தீர்தாண்டதானம் மீனவ கிராமத்தின் அருகே கடலில் திடீரென சுழல் உருவானது. அப்போது கடல் நீர் வேகமாக மேலே எழும்பியது. அது மெல்ல நகர்ந்து கரை பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழம்புற்றுநாதன் என்பவரின் பைபர் படகை சேதப்படுத்தியது.
இந்த நிகழ்வை மீனவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியா 75 - ஜம்மு காஷ்மீரை காக்க உயிர் தியாகம் செய்த மக்பூல் ஷெர்வானி