ETV Bharat / state

தடல்புடலாக திமுக வேட்பாளருக்கு வரவேற்பு: கடைசியில் அடிதடியில் முடிந்த நிகழ்ச்சி! - Ramanathapuram news in Tamil

இராமநாதபுரம்: திமுக வேட்பாளருக்கு வரவேற்பளித்த நிகழ்ச்சி அடிதடியில் முடிந்ததால், பரமக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தடல் புடலாக திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

author img

By

Published : Mar 14, 2021, 11:57 AM IST

இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நேற்று (மார்ச் 13) ராமநாதபுரம் தொகுதிக்கு பரமக்குடி வழியாக சென்றார்.

அப்போது அவருக்கு கட்சியினர் பெரும் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்வின்போது திமுகவைச் சேர்ந்த கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் குழுவுக்கும், திமுக இளைஞரணி அமைப்பாளர் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளத் தொடங்கினார். இந்நிலையில், தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்தி வேட்பாளரை பத்திரமாக அனுப்பி வைத்தனர் .

தடல் புடலாக திமுக வேட்பாளருக்கு வரவேற்பு: கடைசியில் அடிதடியில் முடிந்த நிகழ்ச்சி!

திமுகவினருக்குள் ஏற்பட்ட இந்த அடிதடி தகராறில் பயந்த அந்த வழியே சென்ற பொது மக்கள் சிதறி ஓடினர். இதனால் பரமக்குடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.