ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்; இவரது மனைவி சர்மிளா. இவர் காலையில் வீட்டை பெருக்கிக் கொண்டு இருந்த போது, கொழுந்தரை கிழக்கு தெருவைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் ஷர்மிளாவின் வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் இருந்த ஏழு பவுன் தங்க தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். உடனே சர்மிளா கூச்சலிட்டதையடுத்து, அவர் சர்மிளாவின் கழுத்தை நெரித்துள்ளார்.
சர்மிளாவின் சத்தம் கேட்டு வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் மாதவராமன் கீழே இறங்கி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரைப் பார்த்து தப்பியோட முயன்ற திருமுருகன், நிலை தடுமாறிக் கீழே விழுந்து அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் திருமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி நகர காவல்துறையினர் திருமுருகனை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!