இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இன்று (மார்ச் 22) இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்கா, தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.