ETV Bharat / state

கரோனா தடுப்பு பணியாளர் தாக்குதல் - 8 பேர் மீது வழக்கு - ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு பணியாளர் தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் கமுதி அருகே கரோனா தடுப்பு பணியாளரை தாக்கியதாக 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Covid Ramanathapuram worker attacked  Corona prevention staff  ramanathapuram news  ramanathapuram latest news  கரோனா தடுப்பு பணியாளர் தாக்குதல்  கரோனா தடுப்பு பணியாளர்  ராமநாதபுரம் செய்திகள்  ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு பணியாளர் தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு  கரோனா தடுப்பு பணியாளர் தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு
8 பேர் மீது வழக்கு
author img

By

Published : Jul 29, 2021, 11:26 AM IST

ராமநாதபுரம்: கமுதி அடுத்த அபிராமம் அருகே மேலக்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக களப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கீழக்குளம் கிராமத்தில், நேற்று (ஜூலை 28) பொதுமக்களுக்கு முத்துக்குமார் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் போது 8 பேர் கொண்ட கும்பல், அவரை கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் சிவகங்கை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மேலக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், உடையார், மாணிக்கம், முத்தமிழ்செல்வன், ஆறுமுகம், இருளாயி, கிழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலா, சண்முகம் உள்ளிட்ட 8 பேர் மீது அபிராமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.