ராமநாதபுரம்: நரிப்பையூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது தென்னந் தோப்பில் சட்டவிரோதமாக 50 கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சாயல்குடி காவல் துறையினர், கஞ்சா செடிகளை தீயிட்டு கொளுத்தினர். இதுதொடர்பாக அபுபக்கர் சித்திக்கை அவர்கள் கைது செய்தனர்.
காவல் துறை விசாரணை:
பின்னர், தென்னந்தோப்பிலுள்ள குடிசையில் சோதனை செய்தபோது அங்கு 33 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், கஞ்சா பொட்டலம் வாங்க வந்த வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜ் என்பவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர்கள்: வைரல் காணொலி