ETV Bharat / state

ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

ராமநாதபுரம்: போகலூர் யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைக்கக்கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாஜகவினர்
பாஜகவினர்
author img

By

Published : Nov 30, 2020, 6:17 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் யூனியன் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைப்பதற்கு பிடிஓ அனுமதி மறுத்தார். இதனால் கடந்த நவம்பர் 23ஆம் தேதி பாஜக ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் தலைமையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் சுவரில் பொருத்திவிட்டுச் சென்றனர்.

அதை பிடிஓ ராஜகோபால் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இன்று (நவ. 30) பாஜகவினர் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு, பிடிஓவிற்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து பாஜகவினர் நடை பயணமாகச் சென்று போகலூர் யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்கு அனுமதி கோரினார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற ஏபிடி செல்லம்மாள், பரமக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் முருகனின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்டனர்.

இதனையடுத்து அரசு அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படம் வைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஊராட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.