மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களினால் பாஜக அலுவலர்கள் தாக்கப்படுவதாகவும், பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் செயலை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: யானைகளை துன்புறுத்தும் பழங்குடியின இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ