ETV Bharat / state

'ராமநாதபுரத்தில் நவோதயா பள்ளிகள் கொண்டு வருவேன்' - நயினார் நாகேந்திரன் உறுதி! - பாஜக வேட்பாளர்

ராமநாதபுரம்: "நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நவோதயா பள்ளி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதி அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்
author img

By

Published : Mar 25, 2019, 8:43 PM IST

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார்.

பின் செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

நாடாளுமன்றத் தேர்தலில் தான் வெற்றி பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் அடிப்படை பிரச்னைகளான குடிதண்ணீர், மீனவர், விவசாயிகள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் இயங்கக்கூடிய ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2ஆம் தேதி ராமநாதபுரத்தில் பரப்புரை செய்ய இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரும் பரப்புரை செய்ய உள்ளனர். பரப்புரை தேதி உறுதி செய்த பின் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்ற பயத்தினாலே அதிகளவில் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் மத்திய அரசின் நவோதயா பள்ளி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கும். அதிமுகவின் ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதால் அதிமுக செல்வாக்கு சரிந்ததாக கருதி விட இயலாது என்றும் குறிப்பிட்டார்.

Intro: ராமநாதபுரம்
மார்ச். 25
ராமநாதபுரத்தில் நவோதயா பள்ளி கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் பாஜக ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன்.

Body:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை இன்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கொ. வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கைகளில் இரு எலுமிச்சம் பழங்களை வைத்து கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்
செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான குடி தண்ணீர், மீனவர், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும், இராமேஸ்வரத்திற்க்கு பகல் நேரத்தில் இயங்கக்கூடிய ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2ஆம் தேதி இராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தேதி உறுதி செய்து அறிவிக்கப்படும் என்று
கூறினார்.

தொடர்ந்து
செய்தியாளர் கேள்வி பதில் அளித்த என நாகேந்திரன்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக பாஜக கூட்டணி கட்சி வெற்றிபெறும் என்ற பயத்தாலே அதிகளவில் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்து வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் மத்திய அரசின் நவோதயா பள்ளி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் இதன் மூலம் ஏழை மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கும்

அதிமுகவின் ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதால் அதிமுக செல்வாக்கு சரிந்ததாக கருதி விட இயலாது என்றும் குறிப்பிட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்த போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் வகுப்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா பாஜக மாநில துணை தலைவர் நாகராஜன் குப்புராமு அதிமுக மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.