ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூர்சுபைர் அலி (27), தங்கதுரை(26). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் உச்சிப்புளியிலிருந்து புதுமடத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் பாலத்தில் சென்றபோது நிலைதடுமாறி பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் மோதினர். இந்த விபத்தில் பாலத்திலிருந்து கீழே தூக்கிவீசப்பட்ட இருவரும், தலையில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உச்சிப்புளி காவல் நிலையத்தினர் அவர்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
கரை ஒதுங்கிய இலங்கை படகு - பயங்கரவாதிகள் ஊடுருவலா என்ற கோணத்தில் விசாரணை!