ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கரோனா காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை ஏற்றார்.
அதில் இந்தாண்டு சிறப்பாகப் பணிபுரிந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு மாநில அரசின் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன், கல்வித் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.