அண்மையில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ஏப்ரல். 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலை, இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும், அதனைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று (ஏப். 16) ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகப்புத்ராவிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் வைத்த கோரிக்கைகள்
- "மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனம் புண்படும்படியாக எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும்.
- இப்படத்தின் கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தப் படத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். மேலும், படக் குழுவினர் மருத்துவர் சமூக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 'தீராத உடல்வலி - பவர் ஸ்டாருக்கு கரோனா தொற்று உறுதி'