ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்த போஸ் - சுந்தரி என்பவரின் மகன் சுரேஷ். அஸ்ஸாமில் பணியாற்றி வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சுரேஷ் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுரேஷின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அரசு சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சுரேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர் ராணுவ மரியாதையுடன் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டபோது அவருடைய உடல் மீது போர்த்தப்ட்ட தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்